விருதுநகர் மூன்றாவது புத்தக திருவிழாவில் பரிசாக பெறப்பட்ட புத்தகங்களை மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், நூலகங்களுக்கு வழங்கும் பணிகள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (11.11.2024) அன்று விருதுநகர் மூன்றாவது புத்தக திருவிழாவில் பரிசாக பெறப்பட்ட ரூ.11 இலட்சம் மதிப்பிலான 9450 புத்தகங்களை மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், நூலகங்களுக்கு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 10.10.2024 வரை மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்றது.
இந்த புத்தகத் திருவிழாவில், பல்வேறு தரப்புகளிடம் ரூ.11 இலட்சம் மதிப்பிலான 9450 புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட புத்தகங்களில், 334 புத்தகங்கள் நூலகங்களுக்கும், 500 புத்தகங்கள் போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும், 8616 புத்தகங்கள் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் காலாண்டு தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பரிசாக வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
0
Leave a Reply