25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி   28.02.2026 முதல் 90 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி   28.02.2026 முதல் 90 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் ஆறு நோய்களை தடுப்பதற்கான விரிவு படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் 1978 - இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தற்போது 11 வகையான தடுப்பூசிகள் கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும்  குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு  12 வகையான தடுப்பூசிகளால் தடுக்கப்படக் கூடிய காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இன்புளுயன்ஸா - நிமோனியா மற்றும் மெனிஞ்ஜிடிஸ், இரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா ரோட்டாவைரஸ் வயிற்றுப்போக்கு நோய், நியுமோகோக்கல் நியுமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக்காச்சல் ஆகிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக தற்போது பெண்களை தாக்கும் கருப்பைவாய் புற்று நோயை தடுப்பதற்காக  இந்தியா முழுவதும் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி (கார்டாசில்) ஒரு தவணை வரும் 28.02.2026 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

நமது விருதுநகர் மாவட்டத்தில் இத்தடுப்பூசி அனைத்து அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வைத்து   28.02.2026 முதல் 90 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.நமது மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து 27.02.2026 அன்று நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்திய குழந்தைகளின் பதிவுகள் U-WIN செயலியில் பதிவிடப்பட்டு அவர்களுக்கு மின்னணு சான்றிதழ் (Digital Vaccination Certificate) வழங்கப்படும். இதற்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் 14 வயதுடைய பெண் குழந்தைகள் தங்கள் தாய் அல்லது தந்தையுடன் வரவேண்டும் மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பயனாளிகள்   (14 வயதுடைய பெண் குழந்தைகள்) ஆதார் எண்ணுடன் வரவேண்டும்.நமது சுகாதார மாவட்டத்தில் இத்தடுப்பூசி மூலம் 14 வயதுடைய பெண் குழந்தைகள் 20788 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 14 வயதுடைய பெண் குழந்தைகளுடைய பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலித்தி கருப்பைவாய் புற்றுநோயில் இருந்து பாதுகாத்திட வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News