25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை  முகாம்-2024 23.09.2024 அன்று மாவட்ட அளவிலான PRADHAN MANTRI NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)   அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேற்;கண்ட முகாமில், கீழ்க்காணும் அரசு /பிரபல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.  
1. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விருதுநகர்
2. தமிழ்நாடு அரசு மின்பகிர்மானக் கழகம்
3. தமிழ்நாடு அரசு சிமெண்ட்ஸ்
4. தமிழ்நாடு நகர் ஊரமைப்புக் கழகம்
5. MRF Tyres
6. Sundaram Fasteriers Ltd.,
7. Ramco Cements Ltd.,
8. Deivendran Plastics
9. TTK Health Care. Pvt. Ltd.,
10. Saranya Precession Tools
11. Dalmia cements Ltd.,
12. TVS Motor company Ltd., Hosur.

  மேலும் ITI - இல் உள்ள தொழிற்பிரிவுகான 1) Fitter  2) Machinist  3) MMV 4) MRAC 5) ELECTRICIAN 6) Turner  7) Welder 8) Wireman  9) Surveyor  மற்றும் பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இதுநாள்வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.7700/- முதல் ரூ.13500/- வரை வழங்கப்படும். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ், (National Apprenticeship Certificate) மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் வழங்கப்படும். எனவே இந்த  அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News