25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


மாவட்ட அளவிலான  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் மற்றும் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து  ஏற்பாடு செய்த மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  (29.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், ஸ்மார்ட் போன், மாற்றுத்திறனாளிக்கா ன இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை, மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு, நலிந்தோர் நலத்திட்டம், தொழில் தொடங்குவதற்கான கடன் வசதி, அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
இக்கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,750/- மதிப்பிலான திறன் பேசி(Smart Phone)களையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.2200/-  மதிப்பிலான காதொலி கருவியையும், 19 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும், 22 நபர்களுக்கு இலவச பேருந்து, ரயில் பயண அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திருமதி அனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்(பொ) திரு.ஜெயபிரகாஷ், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News