வேளாண்மைத்துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2023-2024 மூலம் மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை- வர்ததக கண்காட்சி மற்றும் திருவிழா
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வேளாண்மைத்துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2023-2024 மூலம் மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை- வர்ததக கண்காட்சி மற்றும் திருவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (07.03.2024) நடைபெற்றது.
இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் முடிந்த வரை இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள், இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை முறையில் இருக்கக்கூடிய பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செய்யக்கூடிய வேளாண்மை பொருட்களில் பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதோடு;, மண் வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும், இயற்கை வேளாண்மையை ஒரு மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் பசுமைப்புரட்சியினால் விவசாயத்தில் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகைக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காகவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த தொடங்கினோம்.ஆனால் இந்த ரசாயனத்தின் பயன்பாடு அறிவியல் பூர்வமாக குறிப்பிட்ட அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை தாண்டி உபயோகிக்கும் போது அதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகிறது. தொடர்ச்சியான ரசாயன உரங்கள் மற்றும்; பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டால், பூச்சிகளின் எதிர்ப்புத்திறன் அதிகமாகிறது. அதனால் நாம் பூச்சிக்கொல்லி ரசாயன மருத்துகளின் அளவை அதிகரிக்க வேண்டியுள்ளது.இவ்வாறு அதிகளவு ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது, நன்மை தரக்கூடிய பூச்சிகள் அழிந்துவிடுகின்றன. மேலும், சுற்றுசூழல் மற்றும் நீர் அதிகமாக மாசு படுகிறது.
அதனால் அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில் எந்த அளவுக்கு நாம் ரசாயனத்தை பயன்படுத்த வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ரசயான பயன்பாட்டை குறைத்து முறையான உயிர்பூச்சிக் கொல்லிகளான நன்மை தரக்கூடிய பூச்சிகள் மூலமாக பயிர்களை சேதப்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு இயக்கமாக ஆரம்பித்து இயற்கை விவசாயம் செய்யக்கூடிய குழுக்களில் இருந்து உற்பத்தியாளர்கள் விவசாயிகள் வந்திருக்கிறார்கள். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நன்மை செய்யக்கூடிய பூச்சிகள் மூலமாக தீமை செய்யக்கூடிய பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். நோய் தாக்குதல், பூச்சி, பூஞ்சை உள்ளிட்ட தாக்குதலுக்கு ஏற்றார் போல் எந்தெந்த பூச்சிக்கொல்லிகள் இருக்கின்றன என்பதை எல்லாம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இயற்கை விவசாயத்தை செய்வதன் மூலமாக அதனுடைய விலைப் பொருள்களின் தரமும் உயர்வதோடு, அதற்கு நல்ல சந்தை வாய்ப்புகளும் இருக்கிறது. முறையாக இயற்கை விவசாயம் செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் விளைவித்து அதற்கான சான்றிதழ்களை பெற்று விற்பனை செய்யும் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே இது குறித்த விழிப்புணர்வும், அதனை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றியும், எடுத்துக்கூறும் விதமாக இந்த கருத்தரங்கம் மற்றும் நிகழ்ச்சிகள்; ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply