வீட்டில் கரப்பான், பல்லி தொல்லையா?
வெயில் காலம் தொடங்கியதால் நம் வீட்டில் பூச்சிகள் தொல்லை அதிகரிக்கும். இதுவரை வெளியில் காணாத கரப்பான் முதல் பல்லி போன்றபூச்சிகள்நமதுவீட்டைஆக்ரமித்துகொள்ளும்..உங்கள்வீட்டில் பல்லிகள் அதிகம்இருக்கிறதா, அப்படியெனில் முட்டைஓடுகளை உபயோகிக்கலாம். பல்லிகள் வரும் இடங்களில் ஜன்னல்கள்ஓரமாக வைத்தால் அந்த வாசனைக்கே வராது. முக்கியமானடிப்ஸ் என்னவென்றால் முட்டைஓடை வாரம் ஒருமுறைமாற்றி விடுங்கள். அதனால்கெட்ட வாடைகளில் இருந்துதப்பிக்கலாம்
மார்க்கெட்டில்இந்த கரப்பான் பூச்சிகளைவிரட்ட நிறைந்த மருந்துகள்விற்க படுகின்றன. ஆனால் இவை ஏதும் நமது உடலுக்குநல்லவை இல்லை. அதனால்இந்த வீட்டு பொருட்களைவைத்து இந்த பூச்சிகளைவிரட்டுங்கள் இதனால் வீட்டுக்கும்சுகாதாரத்துக்கு எந்த கேடும்விளையாது.வெங்காயதோல்கள் மற்றும் பூண்டுதோல்கள் இவற்றை ஜன்னல்கதவுகள், ஓட்டை இருக்கும்இடங்களில் வைப்பதால் அதில் இருந்து வெளியேறும்வாசனை பல்லிகளை விரட்டும். மேலும்வேறு எந்த பூச்சிகளும்வீட்டுக்குள் அண்டாது.
நாப்தலின்அல்லது பாச்சா உருண்டைகள்இவற்றை வீட்டில் வைப்பதால்பூச்சிகள் எளிதில் வருவதில்லை. மேலும்துர்நாற்றம் வீசும் இடங்களில்இடுவதால் மேற்கொண்டு எந்த வடையும் வராமல்இருக்கும். வீடும் சுத்தமானஉணர்வை கொடுக்கும். முக்கியமாக குழந்தைகள்நடமாடும் பகுதிகளில் இருந்துஇவற்றை தள்ளி வைப்பதுநல்லது.பெப்பர்ஸ்பிரே இருந்தால் அவற்றைபூச்சிகள், பல்லிகள் மேல் தெளித்துவிடுங்கள். அப்படி செய்வதால்அவற்றின் தோல் மேல் எரிச்சல் ஏற்பட்டுஅவை தலை தெறிக்கஓடிவிடும். பேப்பர் ஸ்ப்ரேஇல்லை என்றால் சுலபமாகசெய்துவிடுங்கள், பெப்பரை தூளாக்கிகொஞ்சம் நீருடன் கலந்துஸ்ப்ரே பாட்டில்களில் அடைத்து வைத்துஉபயோகிக்கலாம்.கிராம்புஇதை எலும்பிச்சை பழத்தில்குத்தி வைத்தால் கொசுக்கள், சிறிய பூச்சிகள் எளிதில்வீட்டிற்குள் வராது. மேலும்கிராம்புகளை கரப்பான் கண்ணில்படும் இடங்களில் போட்டுவைப்பதால் அந்த வாசனைக்கேபூச்சிகள் ஓடிவிடும்.
0
Leave a Reply