நாய்கள் தொல்லை, கொசுத்தொல்லை, இராஜபாளையம் 33 வது வார்டு
இராஜபாளையம் நகராட்சி 33 வது வார்டுகளின் வாறுகால்களில் தேங்கும் கழிவுகளால் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. பாதி சந்துகளில் ரோடு போடப்படவில்லை, பேவர் பிளாக் சிமெண்ட் ரோடு உயர்த்தி போட்டுள்ளதால் வீடுகள் தாழ்வாகி கழிவுநீர் புகுந்து விடுகிறது. குடியிருப்பு அருகே செல்லும் பிரதான கால்வாய் புதர் மண்டி மெயின் ரோட்டில் பாய்கிறது. சங்கரன்கோவில் ரோடு இணைக்கும் பகுதி பள்ளமாகி பாலம் கைப்பிடிச்சுவர் கம்பி உடைந்து உள்ளதால் கழிவு நீர் பாலத்தில் தேங்குகிறது.
குடியிருப்பு அருகே தொற்று நோய் பாதிப்பு நாய்கள் அதிகம் சுற்றுவதால் அச்சம் ஏற்படுகிறது. குறுகலான தெருக்கள் ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியவில்லை.இதை யார் சரி செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply