முட்டைகோஸ் ஜூஸ் குடிப்பதால் அல்சர் குணமாகும்
முட்டைகோஸில், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, இ, சி, கே, கால்சியம், அயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன.
முட்டைக்கோஸை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் சிறிது இஞ்சி, சீரகம், கல் உப்பு, எலுமிச்சம் சாறு, மிளகுதூள், புதினா இலைகளுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
முட்டைகோஸ் ஜூசில், குறைவான கலோரியே உள்ளதால், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கப் பயன்படுகிறது.
அல்சர் உள்ளோர், முட்டைகோஸ் தண்ணீர் அருந்தி வருவதால், விரைவில் குணமாகும். மேலும் இது வியர்வைப் பெருக்கியாக செயல்படுகிறது. சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
முட்டைகோஸ் ஜூசில் அதிகப்படியான, 'ஐசோசியனேட்' இருப்பதால், இவை நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.
முட்டைகோஸ் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவதால், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமையுடன் இருக்க உதவும். மருகரும்புள்ளிகள், பருக்கள் போன்ற சரும பிரச்னைகளுக்கு, நல்ல பலன் தரும்.
சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால், எலும்புகளும், பற்களும் உறுதியாகிறது. தலைமுடி உதிர்வதை குறைக்கிறது.
0
Leave a Reply