ஆழ்மனதின் பதிவுகளை கண்கள் வழியாக, தீப ஒளிக்குள் செலுத்துங்கள்
அநிகாலை 5 மணிக்கு எழுந்து கை கால் முகம் கழுவி நெய் விளக்கேற்றி ,அதன் முன் தரையில் விரிப்பின் மேல் அமர்ந்து, கண் மூடி பிரபஞ்சத்திற்கும், படைத்தலுக்கும். நன்றி சொல்லி உனது தேவை என்னவோ ,அதை `ஆழ்மனதில் நினைவுபடுத்தி ,சிறிது அமைதி காத்து, பின் கண்களை திறந்து சுடர் விட்டு கொண்டு இருக்கும் ,தீபத்தின் ஒளியை உற்று நோக்கி ஆழ்மனதின் பதிவுகளை கண்கள் வழியாக, தீப ஒளிக்குள் செலுத்துங்கள்,சுமார் 5 நிமிடங்கள் உங்கள் பார்வை தீபத்தோடு கலந்து விட செய்யுங்கள்.இப்படிஒரு செயல் நிறைவேற மூன்று தினம்செயல்படுத்துங்கள். பல விஷயங்களை ஒரே நேரத்தில்நினைக்காமல் ,ஒன்றொன்றாக முயலுங்கள்.பஞ்சபூதங்களில் வலிமையாக உள்வாங்கி செயல்படுத்தும் ஆற்றல் அக்னிக்கு மட்டுமே.யாகம் வளர்ப்பதற்கு இதுவே காரணம் .நம்பிக்கையோடு செய்து வாருங்கள். கண்டிப்பாக ஒரு மாற்றம் வந்தே தீரும்
0
Leave a Reply