( DRY SKIN ) வறண்ட சருமத்திற்கு....
சருமம் வறண்டும், சுருக்கமாகவும் இருந்தால் அப்போது முகத்தில் ஆலிவு எண்ணெயை தடவி சிறிது நேரம் கழித்து சோப்பு போட்டு கழுவினால் முகம் பொலிவாக இருக்கும்.மோரை முகத்தில் தேய்த்து20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் வறண்ட சருமம் பொலிவுடன் காணப்படும் மற்றும் முகம் மென்மையாக இருக்கும். சருமம் மிருதுவாக பழுத்த வாழை பழத்தை நன்கு மசித்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ சருமம் மிருதுவாக காணப்படும். தினமும் முகத்திற்கு தேங்காய் பாலுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகம் மிகவும் புத்துணர்ச்சி பெரும்.சருமம் அழகுபெற பால், கடலை மாவு, மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும், பளப்பளப்பாகவும் மாறும், குறிப்பாக சருமம் அழகுபெற பெரிதும் உதவும்.
0
Leave a Reply