இராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே வன எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அகழி மண் மேவியதால் விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வருகின்றன
இராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மண் மேவிய அகழியை வனத்துறையினர் பராமரிக்காததால் விளை நிலங்களில் யானைகள் புகுந்து,மா. தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க வனப்பகுதி எல்லையோரங்களில் யானை அகழிகளை வெட்டுவதோடு, சேதமான மண் மேவிய அகழிகளை செப்பனிடவும் வனத்துறை நடவடிக்கை எடுக்காதது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் அய்யனார் கோவில் அருகே பல்வேறு இடங்களில் அகழிகள் சேதமடைந்தும், மண்மேவியும் உள்ளதால் யானைகள் வெளியேறும் பாதையாக உபயோகிக்கின்றன. காலப்போக்கில் மண் மூடியதுடன் இவற்றை பராமரிக்காததால் யானைகள் தனியாகவும் கூட்டமாகவும் வந்து சேதம் செய்து வருகின்றன.
இராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே மண்மேவிய அகழியை செப்பனிடாமல் வைத்துள்ளதால் விவசாயிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு தீர்வாக வனப்பகுதியில் இருந்து வெளியேற முடியாத படி விலங்குகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்வதுடன், புதிதாக நிதி ஒதுக்கி அகழிகள் வெட்டப்பட வேண்டும். அதோடு ஏற்கனவே வெட்டப்பட்ட அகழிகளை மண்மேவாமல், சேதமடையாமல் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply