துர்கா கோயில் ஐஹொளெ ( Durga Temple Aihole )
வடக்குகர்நாடகாவின்ஐஹொளெவில்அமைந்துள்ளஇந்தகோயில்விஷ்ணுமற்றும்சிவனுக்குஅர்ப்பணிக்கப்பட்டுள்ளது,இதுசாளுக்கியர்களால்7அல்லது8ஆம்நூற்றாண்டுகளில்கட்டப்பட்டது.இங்கு‘துர்கா’என்றால்‘பாதுகாவலர்’என்றுபொருள்.ஐஹொளெவில் உள்ள துர்கா கோயிலுக்கு தெற்கே அமைந்துள்ள இந்த சிவன் கோயில் ஐந்தாம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது, இது லாட்கான் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு காலத்திற்கு முன்பு லாட்கான் என்ற நபரின் இல்லமாக இருந்தது. இது ஐஹொளெவின் மிக பழமையான கோயில்.
ஐஹொளேவில் இருக்கும் இந்த கோயில் தற்போது துர்கை கோயில் என்று அழைக்கப்பட்ட போதிலும் இது சூர்யதேவனுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது. உருது மொழியில் துர்கம் என்றால் “அணுக முடியாத”. என்று பொருள் கூறப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்தே மலை மீது கட்டப்பட்டுள்ள கோட்டைகள் துர்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு அருகே பழைய கோட்டையின் சுவடுகள் இருப்பதால் இரண்டையும் இணைத்து துர்கம் கோயில் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் துர்கை கோயில் என மாறியுள்ளது. கஜபிருஷ்ட அமைப்பில் கருவறை கட்டப்பட்டுள்ளது. கஜம்யானை: பிருஷ்டம்பின்புறம். யானையின் பின்புறத்தை போன்ற அமைப்பில் கட்டப்படுவது, தமிழில் இதை தூங்கானைமாடக் கோயில் என்று கூறுவார். இந்த கோயிலின் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என கணிக்கப்பட்டு உள்ளது. கிடைக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றின் மூலம் இந்த கோயில் சூர்யதேவனுக்காக “குமார” என்பவரால் கட்டப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. கருவறைக்கு மேல் சிதைந்த விமானம் காணப்படுகிறது. நாகர வகை விமானம் என இதை வகைப்படுத்தியுள்ளனர். முகமண்டபம், மகாமண்டபம், கருவறை ஆகியவற்றை கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. முக மண்டப தூண்களில் நிறைய புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.
கருவறையைச்சுற்றி வர உள்ளேயே பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் தேவகோட்டங்களில் சிற்பங்கள், கல் சாளரங்கள் காணப்படுகின்றன. இதை ஜாலம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. தேவகோஷ்ட சுவர்களில் இருந்து சரிந்த கூரை பகுதியை தாங்கி நிற்கின்றன. வாதாபிகுடைவரையில் இருபத்து போலவே இங்கேயும் மச்ச சக்கரம், நாகராஜனின் சிற்பம் காணப்படுகிறது. வடகிழக்கில் ரிஷபாந்திகர் ( இடப அணுக்கர் ). தெற்கில் நரசிம்ம அவதாரம். தென் மேற்கில் கருடனின் மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு. வட மேற்கில் வராகமூர்த்தி. வடக்கில் மஹிஷனை வதம் செய்யும் தேவி. வட கிழக்கில் ஹரிஹர மூர்த்தி என ஆறு தேவகோட்டச் சிற்பங்கள் இங்கே காணப்படுகிறது. சில கோட்டங்கள் வெற்றிடமாகவும் உள்ளன. தேவகோட்டங்களுக்கு இடையே உள்ள சுவர் பகுதியில் ஜாலங்கள் உள்ளது. தென் கிழக்கில் ஸ்வஸ்திக் சின்னம், தாமரைமலர். தெற்கில் செவ்வக வடிவ ஜாலத்தின் நடுவே பூக்கள், தென் மேற்கில் எட்டு ஆரங்கள் கொண்ட சக்கரம். வட மேற்கில் பன்னிரு ஆரங்கள் கொண்ட சக்கரம். வடக்கில் சதுர வடிவங்கள் போன்ற ஜாலங்கள் காணப்படுகின்றன. அலங்கரிக்கப்பட்ட கருவறை நுழைவு வாயிலின் இரு மருங்கிலும் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் மூலவர் காணப்படவில்லை.
ஐஹொளெவில் உள்ள துர்கா கோயிலுக்கு தெற்கே அமைந்துள்ள இந்த சிவன் கோயில் ஐந்தாம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது, இது லாட்கான் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு காலத்திற்கு முன்பு லாட்கான் என்ற நபரின் இல்லமாக இருந்தது. இது ஐஹொளெவின் மிக பழமையான கோயில்.
0
Leave a Reply