25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


முட்டை கட்லெட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முட்டை கட்லெட்

தேவையான பொருட்கள் 

1/4 கிலோ உருளைக்கிழங்கு ,1 முட்டை கெட்டியாக வேக வைத்தது ,3/4 தேக்கரண்டி மிளகாய்ப் பொடி ,1/4 தேக்கரண்டி பொடி உப்பு ,1 தேக்கரண்டி பால் ,1 மேஜைக்கரண்டி கார்ன்பிளார் ,1 மேஜைக்கரண்டி தேக்கரண்டி  கப் உலர்ந்த ரொட்டித்தூள் ,200 மிலி நெய் அல்லது எண்ணெய். 

செய்முறை -  வேக வைத்த முட்டையின் ஓட்டை உரித்து எட்டு துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை மெதுவாகும் வரை வேக வைத்துத் தோலுரித்துச் சூட்டுடன் பால், வெண்ணெய், உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு மாவாகக் கட்டியின்றிப் பிசையவும்.  கையில் கார்ன்பிளார் மாவுதொட்டுக் கொண்டு உருளைக் கிழங்கு கலவையைக் கமலாப் பழ அளவு உருண்டைஎடுத்துக் கிண்ணம் போல் செய்து ஒரு முட்டைத் துண்டை உருண்டைக்குள் வைத்து மூடி வெடிப்பின்றி உள்ளங்கையால் தட்டவும். 

கார்ன்பிளார் மாவில் தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள் போட்டுத் தோசை மாவு போல் கரைக்கவும்.  வாணலியில் நெய்யை ஊற்றிப் புகை வந்ததும் இந்த கட்லெட்'டை கார்ன்பிளார் மாவில் தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி நெய்யில் இரண்டு பக்கமும்பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.   கட்லெட் மீது ரொட்டித்தூள் படிந்து இருக்கும் படி அமுக்கவும். மாவாகப் பிசைந்த உருளைக்கிழங்கு தளர்த்தியாக இருந்தால் தேவையான அளவு கார்ன்பிளார் மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கலாம்.  சுவையான முட்டை கட்லெட் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News