தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா அழைப்பிதழை திருநங்கை, மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்களர்களுக்கு வழங்கி அழைப்பு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(16.04.2024) மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குபதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப. அவர்கள், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா அழைப்பிதழை திருநங்கை, மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்களர்களுக்கு வழங்கி, ஏப்ரல்-19 அன்று தவறாமல் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில், வருகின்ற மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதிவிகித வாக்குபதிவை எட்டுவதற்காக நாள்தோறும் வாக்களார்களை கவரும் வகையில் அரசுத்துறை மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேர்மையான மற்றும் 100 சதவிகிதம் வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S. அவர்கள், தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்குடன் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா அழைப்பிதழை திருநங்கை, மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்களர்களுக்கு வழங்கி, ஏப்ரல்-19 அன்று குடும்பத்தில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் சின்னத்துடன் தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா மக்களவைத் தேர்தல் 2024 என்ற முகப்பு வாசகங்களுடன் பனை ஓலையில் அச்சிடப்பட்டுள்ள இந்த அழைப்பிதழில்,
விருதுநகர் மக்களவை தொகுதி தேர்தல் திருவிழா அழைப்பிதழ்.
“அன்புடையீர் வணக்கம். நிகழும் மங்களகரமான திருவள்ளுவராண்டு 2055 சித்திரை 6-ம் நாள் (19.4.2024) வெள்ளிக்கிழமை நலம்தரும் நன்னாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா, தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெறுகிறது. நாள்- 19.04.2024 நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், இந்திய தேர்தல் ஆணையத்தின் கைப்பேசி செயலிகள் குறித்த விவரங்கள், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 04562-252100, 04562-221301, கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 425 2166, வாக்காளர் சேவை மையம் 1950 ஆகிய தகவல்களும் இந்த அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளன.எனவே18வயதுபூர்த்திஅடைந்தஅனைவரும்வருகின்றமக்களவைதேர்தல்2024ஏப்ரல்-19அன்றுதவறாமலும்,பரிசுப்பொருட்கள்,பணத்துக்குஆட்படாமல்நேர்மையாகவும்வாக்களிக்கவேண்டும்எனமாவட்டதேர்தல்நடத்தும்அலுவலர்,மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply