தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகள்
மக்களவைப் பொதுத் தேர்தல்-2024-யை முன்னிட்டு, விருதுநகர் சட்டமன்றத் தொகுதியான அல்லம்பட்டி சாலை மற்றும் மதுரை - தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் இரவில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மக்களவைப் பொதுத்தேர்தல் -2024 இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் 16.03.2024 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு 21 பறக்கும் படை, 21 நிலையான கண்காணிப்புகுழு, 7 வீடியோ கண்காணிப்பு குழு ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை குழுக்கள் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் என்ற விகிதத்தில், ஒரு துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர், ஒரு சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், 1 விடியோகிராப்பர் என 6 நபர்களும் அந்தந்த சட்டமன்ற தொகுதியிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள 21 பறக்கும் படை வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவிகள் பொறுத்தப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழுக்கள் என்ற விகிதத்தில், ஒரு துணை வட்டாட்சியர் அதற்கு மேற்பட்ட நிலையிலான அலுவலர், ஒரு சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், 1 விடியோகிராப்பர் என 6 நபர்களும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் சோதனைச் சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், மாவட்டத்தில் 7 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு துணை வட்டாட்சியர் அதற்கு மேற்பட்ட நிலையிலான அலுவலர், துணை அலுவலர் என 2 நபர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையும், தேர்தல் கட்டுப்பாட்டு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 2166 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும், 04562- 252100, 221301, 221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 1950, 0452-234600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உடைய C-VIGIL என்ற தொலைபேசி செயலியில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply