25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
(நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >>


தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் காரியாபட்டி ஆகிய 4 வட்டாரங்களைச் சார்ந்த 184 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விருதுநகர் மற்றும் காரியாபட்டி வட்டாரங்களை ஒன்றிணைத்து விருதரசி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் முதன்மைச் செயல் அலுவலர்-1 மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர்-1 பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது.
 முதன்மைச் செயல் அலுவலர் அவர்களின் தகுதிகளாக B.ScAgri, / D.Agri / MBA  முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 40 வரை ஊதியம் ரூ.15000/- மற்றும் கொள்முதல் விற்பனை மேலாளர் அவர்களின் தகுதிகளாக ஏதேனும் ஒரு பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 25 முதல் 45 வரை ஊதியம் ரூ.10000/- மேற்குறிப்பிட்ட பணிகளில் அனுபவமுள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்படி விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுடைய சுய விபரபடிவம் (Resume) மின்னஞ்சல் மூலமாக, தபாலிலோஅல்லது நேரிலோ vnr.tnrtp@yahoo.com வருகிற 09.10.2024-ம் தேதி மாலை 5 மணிக்குள்; அனுப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.  
 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News