25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


சிறிய அளவிலான கைத்தறி பூங்கா  மூலம் பயன்பெற விரும்பும் தொழில் முனைவோர்கள் இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம்-
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறிய அளவிலான கைத்தறி பூங்கா மூலம் பயன்பெற விரும்பும் தொழில் முனைவோர்கள் இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம்-

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள்   (Mini Handloom Parks)  அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்குத் தேவையான தொழிற்கூடம்,  Preloom, Post Loom  மற்றும் Godown வசதி அமைத்து, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் (CFC) உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் தேவைக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது.
விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் /Wholesalers / Retailers / Cooperative Societies / Associations / Entrepreneur  மற்றும் Master Weaver  நெசவாளர்கள் ஆகியோர் அடங்கிய  சிறப்பு நோக்கு முகமை (SPV) அமைத்து, நல்லதொரு வியாபார சந்தை, Design தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தி செய்யத் தேவையான நடைமுறை மூலதனம் ஆகியவற்றைக்  கொண்டு வந்து, மேற்படி பொது வசதி மையத்தில் (CFC) உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம்.
கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர், மேற்படி சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது.
இந்த அரிய வாய்ப்பைப் பெற்றிட, விருப்பமுடையோர் www.loomworld.in   என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் 30.03.2024-க்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News