குடும்ப அட்டை வகை மாற்றம் தன்னார்வலர் சிறப்பு முகாம் 15.02.2025 அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் அரிசி கடத்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலும், மிகை புழக்கத்தைக் குறைக்கும் நோக்கிலும், அரிசி குடும்ப அட்டைகளை பிற வகைகளாக மாற்ற விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்று குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய, விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH), அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் (AAY), முன்னுரிமை அற்ற அரிசி ,குடும்ப அட்டைகள் (NPHH(R)) ஆகியவற்றை விருப்பமுடைய தன்னார்வலர்கள், 15.02.2025 அன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், விண்ணப்பப் படிவங்கள் கொடுத்து முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டையாகவோ (NPHH-S) அல்லது எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைகளாகவோ (NPHH-NC) மாற்றலாம். விருப்பமுடைய, தன்னார்வலர்கள் இம்முகாமை பயன்படுத்தி பொது விநியோக திட்டம் பயன்பாடு சரியான முறையில் தேவைப்படும் மக்களுக்கு சென்றைடைய முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply