பழுதான கண்மாய் ஷட்டர்களை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
இராஜபாளையம் விவசாய தேவைகளின் முக்கிய ஆதாரமாக உள்ள கண்மாய், குளங்களுக்கு நீரை தேக்கி வைக்கவும் அவசியமான போது திறந்துவிடவும். ஷட்டர்கள் முறையாக இயங்குவது அவசியம். 750-க்கும் அதிகமான கண்மாய்களில் நீர்வளத்துறை, ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப் பாட்டில் உள்ள பெரும்பாலானவற்றில் இதே நிலை இருந்தும் மழைக்காலத்தின் போது அவற்றை முறையாக இயக்க முடியாமல் தண்ணீர் வெளியேறிய நிலை காணப்படுகின்றன. நீர்வள ஆதாரத்துறையினர் அதிகாரிகள் கண்மாய்களை, மாரமத்து பணிகளில் கரையை உயர்த்துவது, ஆழப்படுத்துவது என நடைபெறும் பெரும்பாலான பணியில், ஷட்டர்களை முறையாக செயல்பாட்டின் கீழ் கொண்டு வருவது இல்லை. இராஜபாளையம் கருங்குளம், அயன்கொல்லங்கொண்டான் பெரியகண்மாய், வெங்காநல்லூர் கண்மாய், முகவூர் கண்மாய், சமுசிகாபுரம் கீழ இழுப்பிலாங்குளம் உள்ளிட்ட கண்மாயிகளில் இந்த நிலை உள்ளது.
கிணறு வசதியின்றி கண்மாய் நீர் இருப்பையே நம்பி உள்ள நெல் சாகுபடியில் ஈடுபடும் கண்மாய் ஒட்டிய விவசாயிகளுக்கு இதனால் தொடர்ச்சிக்கல் ஏற்படுகிறது. வரும் காலங்களில் மழைக்கு முன்பாக இதற்கென தனித்துவம் வாய்ந்த பொறியாளர்கள் துணையுடன் வரத்து கால்வாய்களை சீரமைத்து நவீன முறையில் ஷட்டர் பராமரிப்பு பணிகளைகண்காணிக்கவேண்டும்,எனஇராஜபாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply