25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெந்தயக் கீரை சாதம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெந்தயக் கீரை சாதம்.

தேவையான பொருட்கள் -
அரிசி ஒரு கப், வெந்தயக்கீரை 3 கட்டு,

 வெங்காயம் 1. 

தக்காளி 2,

இஞ்சி, பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்,

 பச்சை மிளகாய் விழுது 1 டீஸ்பூன், 

மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்,

 மஞ்சள்தூள் கால்டீஸ்பூன், 

எண்ணெய், நெய் தலா 1 டேபிள் ஸ்பூன்,

 சீரகம் கால் டீஸ்பூன், 

பட்டை 1 துண்டு,
லவங்கம் 1 துண்டு, உப்பு தேவைக்கு.
செய்முறை:
அரிசியைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து
உதிர் உதிராக வேக வைத்தெடுங்கள். கீரையைச் சுத்தம் செய்து நறுக்குங்கள். வெங்காயம்,
தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யை ஒன்றாகச் சேர்த்து சூடாக்கி பட்டை,
லவங்கம், சீரகம் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து ,பச்சை வாடை
போக வதக்குங்கள். பிறகு கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, வெங்காயம், சிறிதளவு உப்பு,
மஞ்சள் தூள், சேர்த்து வெங்காயம் வதங்கும்வரை வதக்கி, பிறகு தக்காளி, மிளகாய்தூள் சேர்த்து
வதக்குங்கள். பிறகு சாதம், உப்பு சேர்த்து கிளறி ,குக்கரில் நேரடியாக கொட்டி, மிகமிகக் குறைந்த
தீயில் பதினைந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். வெந்தயக் கீரை சாதம் தயார்.
தயிர் பச்சடி, உருளைக் கிழங்கு பொரியல், அப்பளம் போன்றவற்றுடன் சாப்பிட அபாரமாக
இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News