25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சுதந்திரத்திற்கு முன் பிறந்த சினிமா நட்சத்திரங்கள்..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுதந்திரத்திற்கு முன் பிறந்த சினிமா நட்சத்திரங்கள்..

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே பிறந்து, அப்போது இருந்த சூழ்நிலையிலும் வளர்ந்து சினிமா துறையின் வளர்ச்சிகளை படிப்படியாக பார்த்து, அனைத்தையும் கரைத்துக் குடித்து, பல திறமைகளை உள்ளே அடக்கி கொண்டு, தற்போது உள்ள சூழ்நிலைகளும் புரிந்து நடித்துக் கொண்டிருக்கும் மாபெரும் பிரபலங்கள்..

கவுண்டமணி1939 ஆம் ஆண்டு மே29ம் தேதி பிறந்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். சில சமயங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் தமிழில்60களில் ஆரம்பித்து தனது தனித்துவமான நடிப்பினால்2010 ஆம் ஆண்டு வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவைகள் அனைத்தும் ரசிகர்களால் தற்போதும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

 பாரதிராஜா. தமிழ் சினிமாவில் மிகவும் பரிச்சயமான இயக்குனர்.பாரதிராஜா.1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார். இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்“16 வயதினிலே”. இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் இயக்குனராக இருந்தார். நடிகராகவும் சினிமாவில் வலம் வந்தவர்.

 கே ராஜன்தமிழ் திரையுலகின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர்.. இவர்“பிரம்மச்சாரிகள்” எனும் திரைப்பட த்தை முதலில் இயக்கியுள்ளார். இவர்1941 ஆம் ஆண்டு பிறந்தார்.80களில் ஆரம்பித்த திரையுலக பயணத்தை, தற்போது வரை தொடர்ந்து துணிவு திரைப்படம் வரை நடித்துள்ளார்.

 விஜயகுமார்1943இல் பிறந்து“ஸ்ரீ வள்ளி” என்ற திரைப்படத்தில்1961இல் குழந்தை முருகராக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானவர்.. இவர் பொண்ணுக்கு தங்க மனசு, இன்று போல் என்றும் வாழ்க, தீபம் நீயா, அவள் ஒரு தொடர்கதை போன்ற400 திரைப்படங்களுக்கு மேல் இவர் நடித்து விட்டார். இவர் சப்போர்ட்டிங் நடிகராகவே அதிகபட்சம் நடிப்பார். தங்கம், வம்சம் போன்ற  சீரியல்களில்  நடித்துள்ளார்.

 டெல்லி கணேஷ்தமிழ் சினிமாவில்1970களில் ஆரம்பித்து தற்போது வரை நடித்துக் கொண்டிருப்பவர் ..1944ல் பிறந்தவர், கிட்டத்தட்ட400 திரைப்படங்களுக்கு மேலே நடித்து இருக்கிறார். இந்திய விமானப்படையிலும் இவர் வேலை செய்துள்ளார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன் போன்ற எக்கச்சக்க திரைப்படங்களில் சப்போர்ட்டிங் மற்றும் காமெடி நடிகராகவும் நடித்து உள்ளார். குறிப்பாக அபூர்வ சகோதரர் திரைப்படத்தில் வில்லத்தனமாகவும் நடித்துள்ளர். தற்போது கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 தியாகராஜன்.1981ல்“அலைகள் ஓய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.1946ல் பிறந்தவர், இவர் நடிகர் பிரசாந்தின் தந்தை ஆவார்.80ல் ஆரம்பித்த இவரின் பயணம்2020 வரை தொடர்ந்தது. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எண்ணில் அடங்காதவை. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News