முதன்முதலாக இந்தியாவில் வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி.
காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சி அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது வேளாண் துறையில் நாளுக்கு நாள் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் பல்வேறு புதுப்புது ஆராய்ச்சிகள் ,நவீனத் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படுகிறது.இதன் மூலம் விவசாயிகள் அதிக அளவு விளைச்சல் மற்றும் உற்பத்தி செய்து லாபகரமாக வேளாண் தொழில் செய்து வருகின்றனர்.இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் உள்ள நெற்கதிர்களில் சென்சார்கள் மற்றும் ரேடார்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் பூச்சி தாக்கங்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பணி நடைபெற்றது. இது குறித்து செண்பகராமன் புதூர் விவசாயச் சங்கத் தலைவர் ராக்கிசமுத்து அவர்கள் கூறியதாவதுவேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ள வயல்களில் உழவுப் பணி ஆரம்பித்த நாள் முதல் சென்சார்கள் மூலமாக மண் பரிசோதனை நடைபெற்றது.
தற்பொழுது 50 நாள் பயிர் என்று நிலையில் மீண்டும் சென்சார்கள் மற்றும் ரேடார்கள் மூலமாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் பூச்சி தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த ஆராய்ச்சியின் மூலம் வேளாண் விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர்இதேபோன்று இன்னும் இரண்டு பருவ சீசன்களில் ஆராய்ச்சி செய்து விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் நல்ல முடிவுகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர். தெரிவித்தார்.
0
Leave a Reply