காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் குறுகிய கால (Crash Course) பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படை) - 1299 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 01.04.2025 அன்று வெளியிடப்பட்டு, இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் தகுதித் தேர்வு 21.12.2025 அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு, இதற்கான குறுகிய கால (Crash Course) பயிற்சி வகுப்புகள் 17.11.2025 (திங்கள் கிழமை) முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவிருக்கிறது.
இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும், வாராந்திர இலவச மாதிரித் தேர்வுகளும், தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.
மேலும், விவரங்களை studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். எனவே, TNUSRB - SI தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply