மணக்கும் மல்லிகைப்பூ
மணக்கும் மல்லிகைப்பூ, தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல,பெண்களின் கருபிரச்னைகளுக்கு முக்கிய மருந்தாக மல்லிகைப்பூ உள்ளது.மல்லிகைப் பொடியை தேனில் சேர்த்து சாப்பிட்டால் கருப்பைவலுவாகும்.மல்லிகைப் பூவை கொதிக்க வைத்து, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக பிரச்னைகள் நீங்கும்.
வயிற்று கோளாறு மற்றும் அஜீரன பிரச்னைகளுக்கு மல்லிகைப்பூ சாறு நல்லது.வயிற்றுப்புழுக்களையும் மல்லிகைப் பூ அழிக்கிறது
மல்லிகைப் பூ பொடி, சிறுநீரக கற்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.நீர் பாதையில் இருக்கும் எரிச்சலை கட்டுப்படுத்தும்
நரம்பு தளர்ச்சிக்கு மல்லிகைப் பூ பொடி சிறந்த மருந்து.தாய் பால் கட்டிக்கொண்டால்மல்லிகைப்பூ பொடிையை மார்பில் போட, பால் கட்டி கரையும்.
மல்லிகைப்பூக்களைநீரில்போட்டுகொதிக்கவைத்துஅந்தநீரைப்பனங்கற்கண்டுடன்பருகிவந்தால்,கண்களில்ஏற்படும்சதைவளர்ச்சிகுறைந்து,படிப்படியாகபார்வைதெரியஆரம்பிக்கும்.மல்லிகைப்பூக்களை நன்றாக அரைத்து உடலில் வீக்கம் மற்றும் எரிச்சல் நமைச்சல் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் எளிதில் குணமடையும்.
நமது குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் வயிற்றின் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும். அதைப்போலவே அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப்புண்களுக்கும். வாய்ப்புண்களுக்கும் மல்லிகை பூ சிறந்த மருந்து.
0
Leave a Reply