பிரெட் அல்வா
தேவையான பொருட்கள் : வறுத்த பிரெட் தூள் (வறுத்த பிரெட்டை வாங்கி மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்), சர்க்கரை தலா ஒரு கப், நெய் -ஒண்ணேகால் கப், முந்திரிபருப்பு, ஏலக்காய்த்தூள் தேவையான அளவு.
செய்முறை: அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். அதில் பொடித்த பிரெட்டை சேர்த்து கிளறவும். அவ்வப்போது நெய் விட்டு கிளறி, முந்திரி பருப்பு, ஏலக்காய்த்தூள் தூவவும். ஒட்டாத பதம் வந்ததும், நெய் தனியாக பிரிய ஆரம்பித்ததும். இறக்கி நெய்யை வடித்து விடவும்.
0
Leave a Reply