25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படவுள்ள குரூப்-4 தேர்வுக்கான இலவச வகுப்புகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படவுள்ள குரூப்-4 தேர்வுக்கான இலவச வகுப்புகள்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக  மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் 30.1.2024 அன்று அறிவிக்கை எண் 1/2024 வாயிலாக தொகுதி-IV தேர்விற்கான (6244 பணிக்காலியிடங்கள்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இப்போட்டித்தேர்வு தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மேலும் Group-4 போட்டித் தேர்வு தொடர்பான புதிய வகுப்பு 05.02.2024 தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இத்தேர்வு தொடர்பான இலவச மாதிரி தேர்வுகள்; (TEST Batch) வாரந்தோறும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் இத்தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News