25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >> ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி  >> இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் >> ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர். >> சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் >> ராஜபாளையம்தொழில் வர்த்தக சங்கத்தின் 86வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் >>


பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க  நிதி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க நிதி

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தலா ரூ.3.00 இலட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
பயனாளிகளுக்கான தகுதிகள்மற்றும் நிபந்தனைகள்:
1. குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்
2. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (Ministry of Micro, Small and Medium Enterprises) துறையின் மூலம் பயிற்சிபெற்ற நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
3. விதவை,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்.
4. 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.
5. 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும்.
6. குழு உறுப்பினர்கள் பி.வ., மி.பி.வ., (ம) சீ.ம.இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
7. குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் பங்குகொள்ள ஆர்வமாக உள்ள தையல் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்  வகுப்பைச் சார்ந்த மக்கள் குழுவாகக் கொண்டு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலகத்தில் 20.09.2022-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News