100 மில்லியன் டன் அளவில் உற்பத்தி செய்யும் நாட்டின் 2வது பெரிய சிமெண்ட் சாம்ராஜ்ஜியமாக மாறி உள்ள கௌதம் அதானி குழுமம், அடுத்து தாமிரத் ( COPPER ) துறை
இந்திய வர்த்தக வரலாற்றில் திருபாய் அம்பானிக்கு பின்பு மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரு வர்த்தக சாம்ராஜ்ஜியம் என்றால் அதானி குழுமம் தான். 10-15 வருடத்திற்கு முன்பு குஜராத் மாநிலத்தில் ஒரு பிஸ்னஸ்மேனாக இருந்த கௌதம் அதானி இன்று இந்தியா அளவில் மட்டும் அல்லாமல் ஆசிய அளவிலும் பெரும் பணக்காரராக உள்ளார்.இந்த அதிரடி வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அதானி குழுமம் தனது வர்த்தகத்தைப் பல துறையில் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருவது தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் அதானி குழுமம் தனக்கு சற்றும் முன் அனுபவம் இல்லாத சிமெண்ட் உற்பத்தி துறையில் இறங்கி அடுத்தடுத்து நிறுவனங்களைக் கைப்பற்றி தற்போது 100 மில்லியன் டன் அளவில் உற்பத்தி செய்யும் நாட்டின் 2வது பெரிய சிமெண்ட் சாம்ராஜ்ஜியமாக உள்ளது.இந்த மாபெரும் வெற்றிக்கு பின்பு கௌதம் அதானியின் குறி இப்போது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் முக்கியமான கூறுகளாக இருக்கும் தாமிரத் (Copper) துறையை டார்கெட் செய்ய உள்ளது.
மார்ச் 2023 இல், அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் குஜராத்தில் உள்ள முந்திராவில் தனது முதல் தாமிர சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கியது.இது அதானி குழுமத்தின் துணை நிறுவனமான கட்ச் காப்பர் மூலம் காப்பர் துறையில் நுழைந்துள்ளது. இந்த ஆலை மூலம் ஆண்டுக்கு 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான உற்பத்தித் திறன் கொண்ட இந்த நவீன தொழிற்சாலையாக உள்ளது, இந்தியாவை உலகளாவிய தாமிர சந்தையில் முக்கிய சப்ளையராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் கௌதம் அதானி இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.இந்த இலக்கை அடைய கட்ச் காப்பர் தொழிற்சாலைக்கு நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து மூலப்பொருட்கள் விநியோகத்தை உறுதிப்படுத்த, கட்ச் காப்பர் தற்போது உலகின் முன்னணி சுரங்க நிறுவனமான BHP உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒரு ஆண்டுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.6 மில்லியன் டன்னுக்கும் அதிகமான தாமிர செறிவு (copper concentrate) சப்ளையை உறுதி செய்ய அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காப்பர் உலோகம் பல உற்பத்தித் துறைக்கு முக்கியமானதாக இருக்கும் காரணத்தால் இத்துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் திட்டத்துடன் கௌதம் அதானி சிமெண்ட் துறைக்குப் பின்பு இத்துறையைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவில்புதுப்பிக்கத்தக்கஎரிசக்திதிட்டங்கள்வேகமெடுத்துவருவதால்காப்பர்உலோகத்தின்தேவைஅதிகரிக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவையை வர்த்தகமாக மாறுவது தான் கௌதம் அதானியின் திட்டம்.அதானி குழுமத்தின் தலைமை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமாகச் செயல்படுகிறது இந்த கட்ச் காப்பர். இந்த நிறுவனம் இரண்டு கட்டங்களில் ஆண்டுக்கு 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான உற்பத்தித் திறன் கொண்ட தாமிர சுத்திகரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. 1.2 பில்லியன் டாலர் செலவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை முதல் கட்டத்தில் 0.5 மில்லியன் டன்னுக்கும் அதிகமான தாமிரத்தை உற்பத்தி செய்யும். இது 2029 மார்ச் மாதத்திற்குள் 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான உற்பத்தி திறனை அடையும்.
0
Leave a Reply