வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க
துர்நாற்றம் வீசும் கண்ணாடி பாட்டில்களில் கொஞ்சம் கடுகை போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும். பாட்டிலில் பிடித்துள்ள கரைகளும் நீங்கிவிடும்.
வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.
காலிபிளவர் ,கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் ,அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.
குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
அடுப்பு,சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா. டைல்ஸ சாதாரணத் துணியாலோ அல்லது டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுத்து,பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து, பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு உலர்ந்த துணியால் துடைத்துப் பாருங்கள். "பளிச்' சென்று ஆகிவிடும்.
0
Leave a Reply