துர்க்கை அம்மன்
செவ்வாய்க்கிழமையன்று 5 எலுமிச்சம் பழங்களை எடுத்து இரண்டாக வெட்டி கிண்ணம் போல் அமைத்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 5 எலுமிச்சை மூடிகளில் மொத்தம் 10 விளக்குகள் செய்யலாம்.ஆனால் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு, 9 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும். இந்த 3 விளக்குகளைத் துர்க்கை அம்மன் சன்னதியில் வைத்து வேண்டுதலை ஆரம்பிக்கலாம். ஆயுள் பலம் பெருகநல்லெண்ணெய்க்குப் பதில் இலுப்பை எண்ணெயை உபயோகிக்கலாம்.செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜையைச் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடித்து வர கணவனுக்கு ஆயுள் பெருகும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். திருமணம்| ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் நிச்சயமாகும்.
0
Leave a Reply