பச்சைப்பயறு குருமா
தேவையான பொருட்கள் - பச்சைப்பயறு ஒரு கப், தக்காளி, வெங்காயம் தலா 1 (பொடியாக நறுக்கவும்). இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், சோம்பு -தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, ஏலக் காய், கிராம்பு -தலா 1. மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறை 6 மணி நேரம் ஊற வைக்கவும். முளை கட்டிய பயறு எனில் ஊற வைக்க வேண்டாம். தக்காளி, வெங்காயம். சோம்பு . பட்டை, கிராம்பு, ஏலக்காயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் தனியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தக்காளி, வெங்காய மசாலா விழுது, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். சிறிது வதங்கியதும் பயறைச் சேர்த்துக் கிளறி, தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பாதி வெந்ததும் அரைத்த தேங்காய், உப்பு சேர்த்துக் கிளறவும், நன்றாகக் கொதித்து வரும்போது கொத்தமல்லி தூவி, இறக்கி பரிமாறவும்.
0
Leave a Reply