தலையில் முடி கொட்டுவது நின்று வளர...
அண்மையில் குழந்தை பிறந்திருந்தாலும் அக்காலத்தில் ஏற்படுகிற ஹோர்மோன் மாற்றங்களாலும் முடி உதிரக் கூடும். தலையில் பங்கஸ் தொற்று நோய் போன்ற சரும நோய்கள் இருந்தாலும் அதிகமாக முடி உதிரும். தொற்று நோயல்லாத வேறு சரும நோய்களாலும் முடி உதிரலாம்.உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், மூட்டு நோய்கள், மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு உபயோகிக்கும் சில மருந்துகளும் முடி உதிர்தலை அதிகரிக்கும்.
மிக நெருக்கமான பற்களை உடைய சீப்புகளைத் தவிர்த்து சற்று அதிக இடைவெளி உடைய பற் சீப்புகளை உபயோகியுங்கள். இறுக்கமான பற்கள் உடைய சீப்புகள் முடிகளை இழுத்து பிடுங்கிவிடவும் வாய்ப்புண்டு.முடியை அலங்கரிக்கும் போது மிக இறுக்கமாக முடியைக் கட்டுவதும் கூடாது. இறுக்கமான பின்னல் இறுக்கமான போனி ஸ்டைல் போன்றவற்றை தவிர்த்து சற்று தளர்ச்சியாக முடியைச் சீவி கட்டுவது நல்லது.
விட்டமின்கள், இரும்புச் சத்து, புரதம் போன்ற சத்துக்கள் உள்ள மீன், கீரை, பருப்பு, பயறு வகைகள், காய்கறி பழவகைகள் உள்ளடங்கிய போசாக்கு உணவுகளை உண்பது அவசியம்.
கொஞ்சம் சின்ன வெங்காயம் உரித்து,அதை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடி கட்டி அதில் சாறு பிழிந்து எடுத்துதலையில் தேய்த்து ஒரு1/2 மணி நேரம் கழித்து குளிக்கலாம் இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் கொட்டிய இடத்தில் புது முடி வளர ஆரம்பிக்கும் சின்ன வெங்காயம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சி தரும் இந்த மாதிரி செய்து பாருங்க முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும் .
0
Leave a Reply