சாதம் உதிரி உதிரியாய் இருக்க
தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் செய்கையில் சாதத்தை நல்லெண்ணெய் விட்டு கிளரி பின் செய்தால் சாதம் உதிரி உதிரியாய் இருக்கும்.
தக்காளியை நறுக்கும் உடைந்து போகும் அவ்வாறு உடையாமல் இருக்க ஒரு மணி நேரம் தக்காளியை ஃப்ரீசரில் வைத்திருக்கவும் நன்றாக குளிர்ந்து விடும் பின்பு நறுக்கினால் உடையாமல் வட்ட வட்டமாக நறுக்கி எடுக்கலாம்.
தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.
பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.
உப்பு மஞ்சள் எலுமிச்சை சாறு வெள்ளம்சேர்த்து 30நிமிடம் ஊறவைத்தால் பாகற்காய் கசக்காது.
வடை எண்ணை உறியாமல் இருக்க வெந்த உருளைக் கிழங்கு மசியலைசேர்க்கவும்.
தண்ணீர் கலந்த மணலுக்குள் இஞ்சியை புதைத்து வைத்தால் அதிக நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.
0
Leave a Reply