ஐஸ் கீரீம்
தேவையான பொருட்கள் -பால் 2 லிட்டர்,ஜல்டின் பவுடர் ஒரு ஸ்பூன், கஸ்டர்டு பவுடர் 7 ஸ்பூன், சீனி 400 கிராம், வெண்ணிலா எசன்ஸ், அன்னாச்சி பழ எசன்ஸ் ஒரு ஸ்பூன்.
செய்முறை- பாலை நன்றாக காய்ச்சவும் 2லிட்டர் பால் 1 லிட்டர் ஆகும் வரை வத்தவைக்கவும், பின்பு ஜல்டின் பவுடரை வற்றிய பாலில் சேர்த்து நன்றாக கலக்கவும். கஸ்டர்டு பவுடரை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கி அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து, அதை பாலில் சேர்க்கவும். கடைசியில் சீனியை நன்கு கரைத்தபின்பு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். பால் ஆறிய பின்பு ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.
0
Leave a Reply