சருமத்துக்கு நன்மைகளை தரும் ஐஸ்கட்டி
சருமத்திற்கு ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் இறந்த செல்கள் நீங்கும் அதேநேரம் புதிய திசுக்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, சருமம் பொலிவாக மாறும்.
ஐஸ் கட்டியின் அழற்சி எதிர்ப்பு பண்பு, சரும தடிப்புகள் மற்றும் சரும கொப்புளங்களை குறைக்கிறது. அந்த வகையில் பருக்கள் மற்றும் பருக்களின் தழும்புகளை மறைக்கிறது.
தூக்கமின்மை காரணமாக வீக்கமடையும் கண்கள் மற்றும் கண்விழி (உஷ்ண) கட்டிகளை கரைக்க இந்த ஐஸ் கட்டிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சருமத்தின் இறந்த செல்களைவெளியேற்றும் ஐஸ் கட்டியினை வெள்ளரிக்காயுடன் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி பயன்படுத்த கருவளையங்கள் மறையும்.
ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமம் தளர்வடைவது தடுக்கப்படுவதோடு சருமத்தில் காணப்படும் மென் கோடுகளும் மறையும்.
சருமத்தின் pH அளவை மேலாண்மை செய்யும் ஜஸ் கட்டிகளை சருமத்திற்கு தவறாது பயன்படுத்தி வர, சருத்தின் அதிப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சரும வறட்சி பிரச்சனையும் நீங்குகிறது.
பாலில் முக்கி எடுத்த ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு மசாஜ் செய்து வர, சருமத்தின் இறந்த செல்களை நீங்குவதோடு, சருமத்தில் காணப்படும் கருந்திட்டுக்களும் மறையும்
சிறிதளவு கிரீம் டீ தூளுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் தழும்புகள் மறையும்.
0
Leave a Reply