பொரியல் மீதம் ஆகி விட்டால்
முட்டை தோல் எளிதாக உரிக்க வர முட்டை வேக வைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
பொரியல் அடி பிடிக்கும் போது உடனே கரண்டி வைத்து கிளராமல் உடனே 2ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து கொடுத்தால் அடி பிடித்தது உடனே சரியாகும்.
பொரியல் வகைகள் மீதம் ஆகி விட்டால் அதில் ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்டு பாருங்கள், ருசி அருமையாக இருக்கும்.
காரக்குழம்பு, புளி குழம்பு வகைகள் செய்யும்,போது காரம் கொஞ்சம் அதிகமானால், அதுக்கு வெல்லம் சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் காரம் குறைந்து, ருசியும் கூடும்.
பொரித்த அப்பளம் மீதி ஆகி விட்டால் ஒரு டைட்டான டப்பாவில் போட்டு,fridge ல் வைத்து விட்டால் சுவை மாறாமல் அப்படியே இருக்கும்.
சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும் வர, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.
0
Leave a Reply