சேமியா பாயசம் குழைந்து போய்விட்டால்...
முழு ஆப்பிளை பிரிஜ்ஜில் வைப்பது நல்லது. நறுக்கிய ஆப்பிள் கலர் மாறாமல் இருக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் 2 ஸ்பூன் உப்பு, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து அதில் ஆப்பிளை வைத்தீர்களானால் ஆப்பிள் ஆப்பிளாகவே இருக்கும்.
சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.
அடுப்பிலிருந்து பாத்திரங்களை எடுத்தவுடன், 'சிங்க்' அடியில் வைத்து குழாயைத் திருப்பிவிட்டால், அவற்றின் ஆயுள் குறையும். சூடு ஆறியதும்தான் பாத்திரங்களைக் குழாயின் அடியில் வைக்க வேண்டும்.
வீட்டு அடுக்களையில் ஒரு டம்ளரில்மண் வைத்து அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால், துளிர் விட்டு வளர்ந்தும், அதன் வாடைக்குப் பல்லி வரவே வராது.
வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.
சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு அதை குளிர்பதனப் பெட்டியில் 2 அல்லது 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஓட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.
0
Leave a Reply