இட்லிக்கு மாவு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்
வெந்தயக் குழம்பு கொதித்து இறக்கி வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி எள்ளு பொடியை போட்டால் குழம்பு மிகவும் வாசனையுடன் இருக்கும். அல்லது ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டால் ருசி கூடும்.
பால் தயிர் ஆடையை தனியே எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து சிறிது நேரம் வைத்து கடைந்தால் வெண்ணெய் உருண்டு நன்றாக வரும்.
இட்லிக்கு மாவு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்.
பாத்ரூமில் ஏதாவது மூலையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் வைத்தால் பாத்ரும் மணம் வீசும்.
கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கருவேப்பிலையை தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை கெட்டு போகாது.
0
Leave a Reply