காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால்.....
காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில்ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.
பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.
பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.
கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி நறுக்கும் கத்தி விரைவாக கூர் மழுங்கிவிடும். அதற்கு உடைந்த டைல்ஸ் அல்லது பீங்கான் கப் பின்புறம் வைத்து கத்தியை இலேசாக சூடு பறக்கத் தேய்த்தால் போதும் புதியது போல கூர்மை ஆகிவிடும். பின்னர் நீண்ட நாட்களுக்கு கத்தி மழுங்காமல் இருக்கும்.
0
Leave a Reply