ராஜபாளையம் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
ராஜபாளையம் நகர்ப் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வரையிலான விவசாய பகுதிகளில் மானாவரி பயிர்களான எள், உளுந்து, அவரை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்து தானியங்களை பிரிக்க விவசாயப் பகுதிகளில் இருந்து மெயின் ரோட்டிற்கு கொண்டு வந்து உலர்த்தி தானியங்களை பிரித்து எடுத்தபின்கழிவுகள் ரோட்டோரம் விட்டு செல்வது தொடர்கதையாகிறது.இதில் சிலர் தீ வைப்பதால் சமூக ஆர்வலர்களால் பாதுகாத்து வளர்க்கப்படும் பச்சை மரங்கள்கருகி தீக்கிரையாவதுடன் மின் ஓயர்கள் பாதிப்பு என்பது தொடர்கிறது.ஏற்கனவே ஆலமரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் கருகி சேதம் அடைந்துள்ளன.இதே நிலை அப்பாள் ராஜா ஊரணி, தாட்கோ காலனி, ராஜூக்கள் கல்லுாரி அருகிலும், அலுமினியம் கம்பெனி, தனியார் மூலிகை கம்பெனி, முடங்கியார் பாலம் அடுத்த வனத்துறை குடியிருப்பு என ரோட்டோர பகுதிகளில் விவசாய கழிவுகள் எரிப்பது தொடர்கிறது.விவசாய கழிவுகளை தீ வைத்து எரிப்பதை வனத்துறை அதிகாரிகள் தடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்..
0
Leave a Reply