இராஜபாளையத்தில் மா மரங்களை குத்தகைக்கு எடுக்க ஆட்கள் இல்லை
மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டிய இராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா, பருவநிலை மாற்றம் காரணமாக ,விளைச்சல் அதிகரித்து பருவம் தவறிய மழையினால் மாங்காய்களில் வங்கு பிரச்சனை காரணமாக விலையின்றி மரங்களிலேயே காய்கள் பறிக்காமல் விடும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மா, குத்தகை விவசாயிகள் இடையே கேள்வி இல்லாததால் ஒரு வருடத்திற்கு அடிக்க வேண்டிய தொடர் மருந்து பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மா மரங்களில் பூ பூப்பது குறைந்துள்ளது. இது குறித்து விவசாயி தினேஷ் சங்கர் பராமரிப்பு குறைவு தகுந்த விலை, தொடர்சந்தை தேவை காரணமாக மா விவசாயத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குத்தகை எடுத்த விவசாயிகள் கட்டுபாடியாகாத நிலையை கூறி தற்போது கேட்பாரற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் அறிவித்தபடி இப்பகுதியில் மாம்பழ கூழ் தயாரிப்பு தொழிற்சாலை ஏற்படுத்தியிருந்தால் நஷ்டத்தை தவிர்த்திருக்கலாம் என்றார்.
0
Leave a Reply