25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில்முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் மூலம்  தினசரி சந்தை வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில்முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் மூலம் தினசரி சந்தை வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கம்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், ரூ.1.12 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.7.57 கோடி மதிப்பில் புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

அதன்படி அருப்புக்கோட்டை நகராட்சி, நேதாஜி சாலையில் ரூ.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பூங்காவினையும், சாய்பாபா நகரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவினையும், ராமசாமிபுரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.28.28 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகத்தினையும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு 24-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.57 கோடி மதிப்பில் புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுவதற்கு அடிக்க நாட்டினார்.இந்த புதிய சந்தை வளாகம் 51 கடைகளுடன், ஏடிஎம் குடிநீர் சுத்திகரிப்பு அறை, ஓய்வு அறை, அலுவலகம், சமையலறை, உணவகம், கழிப்பறைகள், மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த புதிய சந்தை வளாக கட்டிடத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாக கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை  அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர் மன்றத்தலைவர் திருமதி சுந்தரலட்சுமி, நகர் மன்ற துணைத் தலைவர் திரு.பழனிச்சாமி, அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் திரு.அசோக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.வள்ளிக்கண்ணு, நகராட்சி பொறியாளர் திரு.கோமதிசங்கர்,நகர் மன்ற உறுப்பினர் திரு.செந்தில் வேல்,உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News