25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


தண்டியனேந்தல் ஊராட்சி, பெரிய புளியம்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை துவக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தண்டியனேந்தல் ஊராட்சி, பெரிய புளியம்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை துவக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், தண்டியனேந்தல் ஊராட்சி, பெரிய புளியம்பட்டி கிராமத்தில் (03.03.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை துவக்கி வைத்தார். காரியாபட்டி ஒன்றியம் , தண்டியனேந்தல் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பெரியபுளியம்பட்டி கிராமத்தில் அரசு சாரா அசேபா தொண்டு நிறுவனத்தின் சார்பாக சுயநிதி பிரிவில் தமிழ் வழியில் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அசேபா தொண்டு நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியை நடத்த இயலவில்லை என முறையாக கடிதம் அனுப்பி பள்ளியை மூடிவிட்டனர்.அசேபா தொண்டு நிறுவனம் பள்ளியை முறையாக கடிதம் வழங்கி தகவல் தெரிவித்து, மூடிய நிலையில் இக்கிராமத்தை சார்ந்த 40 க்கும் அதிகமான மாணவர்கள் அருகில் உள்ள சின்ன புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தனர்.

பெரியபுளியம்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள சின்னபுளியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியானது 300 மீட்டர் தொலைவில் உள்ளது எனவும், பெரியபுளியம்பட்டி கிராமத்திற்கும், சின்னபுளியம்பட்டி கிராமத்திற்கும் இடையில் ஒரு பெரிய ஓடை செல்வதால், பெரியபுளியம்பட்டியிலிருந்து மாணாக்கர்கள் ஓடையினை கடந்து செல்வதற்கு சிரமமான சூழ்நிலை உள்ளது எனவும்,

மேலும், கிராம மக்கள் தங்களது கிராமத்தில் பள்ளி வயது குழந்தைகள் 40 பேர் இருக்கிறார்கள் எனவும், தங்களது கிராமத்திற்கு அரசு தொடக்கப் பள்ளி வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். இந் நிலையில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு அரசு இக் கிராமத்தில் தொடக்கப்பள்ளி தொடங்க அரசாணை பிறப்பித்து உத்திரவிட்டுள்ளது.அதன்படி, அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்த தொடக்கப் பள்ளியை அரசு தொடக்கப்பள்ளியாக அரசாணையின் மூலம் ஈர்க்கப்பட்டு, இப்பள்ளிக்கு புதிதாக பணியிடம் எதுவும் தோற்றுவிக்காமல், மாவட்டத்தில் மிகை பணியிடத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை இப்பள்ளிக்கு மாற்றம் செய்ய ஆணையிடப்பட்டு, இப்பள்ளி தொடர்ந்து செயல்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டு ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள மாணவர்கள் இந்த பள்ளியை நல்ல முறையில் பயன்படுத்தி, வாழ்வில் ஒரு உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.அசோக்குமார், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி முத்துமாரி, பேரூராட்சி தலைவர் திரு.செந்தில்(காரியாபட்டி), காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.இராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.தங்கதமிழ்வாணன், முக்கிய பிரமுகர்கள் திரு.கண்ணன், செல்லம் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பாசன விவசாயிகள், கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News