25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


விருதுநகர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட பணியாளர்கள் ஓய்வு அறையினை திறப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட பணியாளர்கள் ஓய்வு அறையினை திறப்பு

விருதுநகர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் (16.03.2024) விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட பணியாளர்கள் ஓய்வு அறையினை திறந்து வைத்து, பயிற்சி மையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நவீன கணினி ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனத்தை துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் விருதுநகர் மண்டல பொதுமேலாளர் திரு. ச.துரைச்சாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) பொதுமேலாளர்கள் திரு.சமுத்திரம்(தொழில்நுட்பம்), திரு.ராமன்(மனிதவள மேம்பாடு), விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி சுமதி ராஜசேகரன், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், உதவி மேலாளர் திரு.யுவராஜ் பாண்டியன், விருதுநகர் மண்டல வணிக உதவி மேலாளர் திரு.க.மாரிமுத்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News