25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >> ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி  >> இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் >> ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர். >> சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் >> ராஜபாளையம்தொழில் வர்த்தக சங்கத்தின் 86வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் >>


அதிகரிக்கும் விவாகரத்துகள் நம் இந்தியாவில்....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிகரிக்கும் விவாகரத்துகள் நம் இந்தியாவில்....

இந்தியாவில், விவாகரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காதல் திருமணம்VS நிச்சயிக்கப்பட்ட திருமணம்.விவாகரத்து என்ற முடிவை எடுக்கும் தம்பதிகளில், காதல் திருமணம் செய்தவர்களும் இருக்கிறார்கள். விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்?  

சின்ன சின்ன சண்டைகள் போட்டால் கூட, அதை சரி செய்து, தீர்வு காண்பதற்கு முன்னமே, உடனே பிரிவு தான் அதற்கான தீர்வு என்று உடனடியாக நீதிமன்றத்தை அணுகும் தம்பதிகள் ஏராளம்.    

விவாகரத்து அதிகரிக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று, திருமணம் ஆகியும் இன்னொரு ஆண் / பெண்ணிடம் உறவில் இருப்பது. Extra marital affairs என்பது பரவலாகி இருப்பது விவாகரத்தையும் அதிகரிக்கிறது 

 இன்றைய நவீன உலகில், காதல் திருமணத்துக்கு எதிர்ப்புகள் குறைந்து வருகிறது, காதலிப்பவர்களே எதிரியாக மாறிவிடுகின்றனர். காதல் திருமணம் செய்தவர்கள் தான் அதிக அளவில் விவாகரத்து கோருகிறார்கள்.

 இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் அதீதமான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நடைமுறையில் இல்லாத அளவுக்கு வேறுபாடுகளை ஏற்படுத்தி, விவாகரத்துக்கு வழிவகுக்கின்றன. 

சோஷியல் மீடியாவில் மற்றவர்களைப் பார்த்து தன்னுடைய வாழ்க்கையும் அதே போல இருக்க வேண்டும், அதே போல வாழ வேண்டும் என்ற போட்டித்தன்மை தனிப்பட்ட கணவன் மனைவி வாழ்க்கையை பாதிக்கிறது. 

பிஸியான வாழ்க்கை முறையால் கணவன் மனைவி நேரம் செலவழிப்பதே அரிதாகி வருகிறது. இதில் ஒருவர், மற்றவருடன் போதிய அளவு நேரம் செலவிட முடியாமல், கணவனோ அல்லது மனைவியோ தனிமையை உணர்வது, ஒரு கட்டத்தில் பிரிவை நோக்கிய முடிவை எடுக்க வைக்கும்   

திருமணங்கள், இப்போது வரை விருப்பத்தோடு தான் நடக்கிறது என்று கூற முடியாது. ஆண், பெண் இருவருக்குமே, விருப்பம் இல்லாமல், பெற்றோர்கள் வற்புறுத்தல், வயதாகிறது என்ற காரணம், சமூகத்தில் அழுத்தம் போன்றவற்றால் கட்டாயத்தால் திருமணம் செய்வது விவாகரத்தில் முடிகிறது. 

 எல்லா விஷயங்களிலும் பெற்றோர்கள் தலையிடுவது, கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய பிரச்சனைகளைக் கூட பெரிதாக்கி விடுகிறது. விவாகரத்து அதிகரிக்க இது முக்கியமான காரணமாகி உள்ளது. 

திருமண வாழ்வில் பாலியல் உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பாலியல் உறவில் பாதிப்பு, நெருக்கமின்மை போன்றவை, பிரிவை நோக்கிச் செல்லும். 

உடல் ரீதியாக துன்புறுத்துவது, வார்த்தைகளால் காயப்படுத்துவது, தினமும் ஒரு சண்டை என்று எப்போதும் ஏதோ ஒரு வகையில் abuse என்பது விவாகரத்து நோக்கி முடிவு எடுக்க வைக்கிறது.  

இன்று சில தம்பதிகள் குழந்தை பெற்று கொள்ள விரும்பவில்லை. கணவன் அல்லது மனைவி ஒருவருக்கு குழந்தை பெற விருப்பமில்லை என்றால், அவர்கள் விவாகரத்து நோக்கி செல்கிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News