இந்தியா விண்வெளிக்கு அனுப்பும் மனித மாதிரி பெண் ரோபோ "வியோமித்ரா "
இஸ்ரோவின் 'பெண் ரோபோ' ககன்யான் திட்டத்திற்கு அனுப்பப்படுகிறது.இஸ்ரோவின் ககன்யான் திட்டம் இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமாக இருக்கும்.இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் 2025-ஆம் ஆண்டுக்குள் நான்கு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக, சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக விண்வெளிக்கு காலி விண்கலத்தைச் செலுத்தி அதை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வர வேண்டும்.
இரண்டாம் கட்டமாக, விண்வெளிக்கு ரோபோவை வைத்து ஒரு விண்கலத்தை அனுப்பி, பூமிக்கு மீண்டும் பத்திரமாக கொண்டு வர வேண்டும் என்பது இஸ்ரோவின் திட்டம்.
இந்த பணியில் ஈடபட உருவாக்கப்பட்ட பெண் ரோபோ தான் இந்த வியோமித்ரா.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் துணை இயக்குநரும், ஓய்வுபெற்ற விஞ்ஞானியுமான பி.வி.சுப்பாராவ் பிபிசியிடம் வியோமித்ரா குறித்து விளக்கினார்.
0
Leave a Reply