இந்தியா ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் 10 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தது.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில் ,பெண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியாவின் அங்கிதா பகத், பாரிஸ் ஒலிம்பிக்கில்வெள்ளி வென்ற தென் கொரியாவின் நாம் சுஹி யோன் மோதினர். அங்கிதா 7-3 (29-27, 26-26, 26-28, 29-28, 29-28) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்தியாவின் தீபிகா குமாரி, சங்கீதா வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதினர். இப்போட்டி 5-5 (28-28, 28-23, 28-26, 28-29, 28-29) என சமநிலை வகித்தது. பின் 'ஷூட் ஆப்' முறையில் அசத்திய சங்கீதா 6-5 என வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
இந்தியாவின் திராஜ், ராகுல் ஆண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு பைனலில் மோதினர். இதில் திராஜ் 6-2 (28-28, 29-26, 28-28, 28-26) என வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார். ராகுல்வெள்ளி வென்றார்.
இத்தொடரில் 6 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 10 பதக்கம் கைப் பற்றிய இந்தியா முதலிடம் பிடித்தது.
0
Leave a Reply