25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் மூலம் செயல்பட்டு வரும்  கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா  உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  ஆய்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் மூலம் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம்,  நரிக்குடி  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (14.02.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் மூலம் செயல்பட்டு வரும்  கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா  உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் கற்றல் திறன், அடிப்படை வசதிகள், வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், அ.முக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ ரூ.9.10 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களத்தினையும், ரூ.13.42 இலட்சம் மதிப்பில் பள்ளி வாசல் ஊரணி மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, அ.முக்குளம் கிராமத்தில் செயல்பட்டு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் உணவுகள், வயதிற்கேற்ற உயரம், எடை உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருமதி வாசுகி, திருமதி ஜெயபுஷ்பம், உதவி பொறியாளர்கள்; திருமதி காஞ்சனாதேவி, திரு.அர்ஜுனன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News