சர்வதேச புலிகள் தினம்
புலி இந்தியாவின் தேசிய விலங்கு.உலகில் அழிவின் விளிம்பில் இருக்கும் பல உயிரினங்களில் புலி இனமும் ஒன்று. புலிகளின் எண்ணிக்கை சில நூற்று என்ற கணக்கை எட்டியபோது தான், சர்வதேச புலிகள் தினம் அறிவிக்கப்பட்டு, புலிகளை காக்கும் திட்டம் உருவானது.காடுகளை காக்கும் காவலன் என போற்றப்படும் விலங்கு புலி..புலிகளை காப்பதற்காககடந்த2010ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம்29ம் நாள் சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.2030 இல் உலகத்தில் மொத்தமே 3900 புலிகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.பல ஆண்டுகளாகவே புலிகள் அழிவின் விளிம்பில் இருந்து பல்வேறு தகவல்களின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. உலக புலிகள் எண்ணிக்கையில் 70% இந்தியாவில் தான் உள்ளன. நம் நாட்டில் 51 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. கடந்த ஆண்டு கணக்கின்படி மத்தியப் பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகத்தில்,524 புலிகளும் தமிழகத்தில்229 புலிகளும் வசிக்கின்றன. மீதமுள்ளவை மற்ற புலிகள் பாதுகாப்பகங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றன.
உலகக் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு(WorldWildlifeFund) மற்றும் சர்வதேச புலிகள் பாதுகாப்பு அமைப்பு(GlobalTigerForum) ஆகியவற்றின் தரவுகள்படி உலகளவில் மொத்தம்3,890 புலிகள் வாழ்கின்றனஉணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம் புலிகள் தான்.9 வகையான புலிகள் இருந்த நிலையில் தற்போது,6 வகையான புலிகள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.100 ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. தற்போது வெறும்3,800 புலிகள் மட்டுமே இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையே அந்த வனத்தின் வளம் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் 70 சதவீத புலிகள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். அதிலும் புலிகளின் புகலிடமாக நீடித்து நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலைகள். உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.மனித இனத்தின் அவசியத் தேவையான நீர், தூய்மையான காற்று இவை இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் செழிக்க புலிகள் வேண்டும். அதனால், புலிகளை பாதுகாக்கும் வகையில் சர்வதேச புலிகள் தினத்தை கொண்டாட வேண்டியது அவசியம்.இன்றும் புலிகளை அவற்றின் தோல், நகம், பல் என பலவற்றிற்காக வேட்டையாடும் பல கும்பல்கள் உள்ளன. இவர்களிடமிருந்து இந்த மிருகங்களைக் காக்க பொது மக்களாகிய நாமும் ஒன்றுபட வேண்டும்.
0
Leave a Reply