ஐரோப்பிய செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய 'இஸ்ரோ .
நம் நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை முன் கணிப்பு உள்ளிட்ட பல் வேறு பயன்பாட்டிற்காக செயற்கைக்கோள்களை இஸ்ரோ உருவாக்கி, பி.எஸ்.எல்.வி.,-ஜி.எஸ். எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் நிலை நிறுத்துகிறது.இது தவிர, வணிக நோக்குடன் வெளிநாடுகளின் செயற்கைக் கோளும் விண்ணில் நிறுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தை, 'நியுஸ் பேஸ் இந்தியா' நிறுவனம் மேற்கொள்கிறது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம், சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய, 'புரோபா 3' பெயரில் இரு செயற்கைக்கோள்களை உருவாக்கியுள்ளது. அவற்றின் எடை, 550 கிலோ. இந்த செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி 3 கோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல். வி., - சி59 ராக்கெட், விண்ணில் திட்டமிடப்பட்ட புவி வட்ட பாதையில், புரோபா - 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. , பி.எஸ். எல்.வி., வகையில், 61வது ராக்கெட். அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சதீஷ் தவான் விண்வெளி மைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகளுக்கு, இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
0
Leave a Reply